செவ்வாய், 31 டிசம்பர், 2019

மல்லாவி நகரில் விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்மாச்சி உணவகம்

வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்ற பேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று 
எதிர்வரும் 02.01.2020. வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.முல்லைத்தீவு 
பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி 
ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் மல்லாவி 
மக்களுக்கு பாரம்பரிய 
உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டவிருக்கின்றது.இதேவேளை அன்றைய தினம் அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விவசாயப்பயிற்சி நிலைய கட்டடமும் திறந்துவைக்கப்பட உள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

அதிஷ்டம் கொட்ட வேண்டுமா.உங்கள் வீட்டில் தூங்குவதற்கு முன்பு இதைச் செய்யுங்கள்.

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தூங்குவதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். ஆனால் அப்படி தூங்கம் நேரத்தில், உடலுக்கு ஓய்வு கிடைக்க மட்டுமின்றி, வாழ்வில் அதிர்ஷ்டத்தை 
வரவழைக்கவும் செய்யலாம்.
என்ன நம்ப முடியவில்லையா? ஆம், ஜோதிடத்தின் படி, ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதன் மூலம், நம் பக்கம் அதிர்ஷ்டக் காற்றை வீச செய்து, வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம். சரி, இப்போது நமது சாஸ்திரங்கள் கூறும் அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து இன்றிலிருந்தே பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.இரவில் படுக்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு சிறிய பையை வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் இரவில் கெட்ட கனவு வந்து தொல்லை செய்வதைத் தடுக்கலாம்.
இரவில் படுப்பதற்கு முன், ஒரு வெண்கல சொம்பில் நீரை நிரப்பி, தலைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்நீரை செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
இரவில் தூங்கும் முன்பு, நல்ல புத்தகத்தைப் படித்துக் கொண்டு தூங்குங்கள். அதுவும் தென் திசையில் தலையை வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் இரவில் நல்ல 
ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
இரவு நேரத்தில் மொபைல் போனை அணைத்து கைக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு, 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். இதனால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் மூளையின் ஆற்றல் மேம்படும்.
இரவில் படுக்கும் முன்பு, பாதங்களை 
வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு, கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, குதிகாலில் தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.இரவில் தூங்கும் முன் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் விஷ்ணு மந்திரத்தை சொல்லுங்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



உடனடி இடமாற்றம் வடக்கில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸாருக்கு

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் கடமையாற்றி வந்த நிலையில், 
வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை,
 வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு 
வரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது யாழில் கடமையாற்றும் 120 தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும், 10 வருடங்களுக்கு மேல் குறித்த பகுதிகளில் கடமையாற்றி வரும்
 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்காதுஇ ஓரிரு ஆண்டுகள் வட மாகாணத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே இவ்வாறு காழ்ப்புணர்ச்சி 
முறையின் கீழ் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த வகையில், சட்டவிரோத செயல்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு சில அதிகாரிகளுக்கு
 இவ்வாறு இடமாற்றம் வழங்காது, நேர்மையாக செயற்படும் குறுகிய காலத்தில் சேவையில், இருக்கும் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை சைவத் தமிழ் மக்களுக்கு தவிர்த்திடுவோம்

தவிர்ப்போமே…..ஆங்கிலப்புத்தாண்டு நள்ளிரவு ஆலய தரிசனத்தை….!
சமீபகாலங்களாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் விடிய விடிய பிரதான ஆலயங்களை திறந்து வைத்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.அர்ச்சனைகளை 
பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர். அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த
 பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு முரணானது.நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது 
விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு.ஒரு நாளின் ஒவ்வொரு 
நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா? மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும், நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.
நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.ஆனால், புத்தாண்டு 
அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசு இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறது. இந்த பழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு மெளனமாக உள்ளனர்.
(அவர்களை சொல்லி குற்றமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்ககளின் போது தான் கோவிலில் வேலை செய்வதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று கருதும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்..!)
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் ,விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் 
எச்சரித்தும், கோவிலை 
காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..இந்து கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை (அது என்ன சிறப்போ தெரியவில்லை. சாதா பிரார்த்தனை என்று ஒன்று இருப்பது 
போன்றும், அந்த வேளைகளில் இறைவனின் அசிஸ்டெண்டுகள் பிரார்த்தனையை 
ஏற்பது போன்றும், சிறப்பு பிரார்தனை சமயத்தில் மட்டும் இறைவனே இருக்கின்ற வேலையெல்லாம் விட்டு விட்டு 
நேரடியாக வருவது போன்றும் ஒரு பெரும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் பக்தி வியாபாரிகள்) நடைபெற்றது என்று செய்திகள் வருகின்றனவே அன்றி மசூதியில் நடை பெற்றது என்று செய்திகளை காண முடிவதில்லை.பாரம்பரியத்தை அவர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள். .. 
ஆனால் இந்துக்களாகிய நாம்..?
நாம் ஒவ்வோருவரும் நள்ளிரவு ஆலய தரிசனத்தை தவிர்த்தாலே ஆகம விதிகளுக்கு முரணான நள்ளிரவு கோவில் நடைதிறப்பு 
முடிவுக்கு வந்து விடும்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>