செவ்வாய், 31 டிசம்பர், 2019

உடனடி இடமாற்றம் வடக்கில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸாருக்கு

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் கடமையாற்றி வந்த நிலையில், 
வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை,
 வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு 
வரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது யாழில் கடமையாற்றும் 120 தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும், 10 வருடங்களுக்கு மேல் குறித்த பகுதிகளில் கடமையாற்றி வரும்
 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்காதுஇ ஓரிரு ஆண்டுகள் வட மாகாணத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே இவ்வாறு காழ்ப்புணர்ச்சி 
முறையின் கீழ் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த வகையில், சட்டவிரோத செயல்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு சில அதிகாரிகளுக்கு
 இவ்வாறு இடமாற்றம் வழங்காது, நேர்மையாக செயற்படும் குறுகிய காலத்தில் சேவையில், இருக்கும் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக