வியாழன், 15 அக்டோபர், 2020

ஊவா மாகாணத்தில் இலஞ்சம் பெற்ற நகர அபிவிருத்தி பணிப்பாளர் கைது

 14,000 ரூபாயை இலஞ்சமாக பெற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊவா மாகாண அலுவலக பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது 
செய்யப்பட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

புதன், 14 அக்டோபர், 2020

நாட்டில் இராணுவத் தளபதி போக்குவரத்து தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளும் ஏனைய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் 
அறிவுறுத்தியுள்ளார்.
வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின் அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் 
தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



அபாய நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் 
தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட 
வேண்டும் யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இல் இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது.
 பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண
 மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோனா தடுப்பிற்கு ஒத்துழைப்பு
 வழங்க வேண்டும்.
அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விபரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>