வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது எனவும் 
தெரிவித்துள்ளார்.
ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் இதுவரை 32 பேர், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் வெளியேறியுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டடுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 24 மார்ச், 2020

ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை வரை 5 மாவட்டங்களுக்களுக்கு

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு (24).இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல் செய்யப்பட்டிருந்தது.
இது எதிர்வரும் (27) வெள்ளிக்கிழமை
 காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அதேதினத்தில் பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏனைய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு 
தளர்த்த்தப்படவுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரஸ்சால் ஊரடங்கு உத்தரவு வடக்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிற்கு விதிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவு செவ்வாய்கிழமை (24.03.20) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்று மதியம் 2மணிக்கு மீளவும் ஊரடங்கு அமுலாகும்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது