செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை சைவத் தமிழ் மக்களுக்கு தவிர்த்திடுவோம்

தவிர்ப்போமே…..ஆங்கிலப்புத்தாண்டு நள்ளிரவு ஆலய தரிசனத்தை….!
சமீபகாலங்களாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் விடிய விடிய பிரதான ஆலயங்களை திறந்து வைத்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.அர்ச்சனைகளை 
பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர். அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த
 பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு முரணானது.நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது 
விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு.ஒரு நாளின் ஒவ்வொரு 
நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா? மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும், நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.
நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.ஆனால், புத்தாண்டு 
அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசு இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறது. இந்த பழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு மெளனமாக உள்ளனர்.
(அவர்களை சொல்லி குற்றமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்ககளின் போது தான் கோவிலில் வேலை செய்வதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று கருதும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்..!)
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் ,விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் 
எச்சரித்தும், கோவிலை 
காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..இந்து கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை (அது என்ன சிறப்போ தெரியவில்லை. சாதா பிரார்த்தனை என்று ஒன்று இருப்பது 
போன்றும், அந்த வேளைகளில் இறைவனின் அசிஸ்டெண்டுகள் பிரார்த்தனையை 
ஏற்பது போன்றும், சிறப்பு பிரார்தனை சமயத்தில் மட்டும் இறைவனே இருக்கின்ற வேலையெல்லாம் விட்டு விட்டு 
நேரடியாக வருவது போன்றும் ஒரு பெரும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் பக்தி வியாபாரிகள்) நடைபெற்றது என்று செய்திகள் வருகின்றனவே அன்றி மசூதியில் நடை பெற்றது என்று செய்திகளை காண முடிவதில்லை.பாரம்பரியத்தை அவர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள். .. 
ஆனால் இந்துக்களாகிய நாம்..?
நாம் ஒவ்வோருவரும் நள்ளிரவு ஆலய தரிசனத்தை தவிர்த்தாலே ஆகம விதிகளுக்கு முரணான நள்ளிரவு கோவில் நடைதிறப்பு 
முடிவுக்கு வந்து விடும்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக