புதன், 26 பிப்ரவரி, 2020

ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங் குயாழில்

யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு
பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல் 4.00 மணிவரை தெல்லிப்பளையிலுள்ள AZIIE ஆங்கில 
கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.ஆா்வமுள்ள மற்றும் Scrabble கற்றுக்கொள்ள விரும்பும் அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ள முடியும்.அனுமதி இலவசம். மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளதால் உங்கள் முன்பதிவுகளுக்கு அழையுங்கள் 0777177622.இந்த இணைப்பினை க்ளிக் செய்து முகப்புத்தகத்தில் நிகழ்வு பக்கத்தில் உங்கள் வரவினை உறுதி செய்து கொள்ளுங்கள்.https://www.facebook.com/events/482756432601342/
வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரபலமாக
 உள்ள இந்த சர்வதேச scrabble விளையாட்டு இலங்கையின் தலைநகரின் பிரபல பாடசாலைகளில் கழகங்கள் அமைத்து மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.யாழ்ப்பாண மாணவர்களும் இதனை கற்றுக்கொள்ள AZIIE ஆங்கில கல்வி நிறுவனத்தினர் இந்த இலவச கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளனர்.
Scrabble தவிர தலைமைத்துவம் மற்றும் சமயோசித எண்ணங்களை வளர்க்கும் சதுரங்கம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு முறைமைகளை கற்றுதரும் மொனேபொலி, கணிதம் மற்றும் சிந்தனையாற்றலை அதிகரிக்கும் ஜப்பானிய விளையாட்டான சுடோக்கு மற்றும்
 யூத குழந்தைகளிடையே பிரபலமான முகாமைத்துவ விளையாட்டுக்கள் போன்ற பல விளையாட்டுக்களை AZIIE (AtoZ International Institute of English) ஆங்கில கல்வி நிறுவனம் வாராந்தம் இலவசமாக தமது மாணவா்களுக்கு பயிற்சியளித்து போட்டிகளை நடத்தி வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியத்தை கெடுக்கும் கைத்தொலைபேசி Gameகளில் மூழ்கி கிடக்கும் இன்றய தலைமுறை சிறுவர்களுக்கு இதுபோன்ற கல்வி நடவடிக்கைகளுடன் கூடிய ஆற்றலை அதிகரிக்கும் விளையாட்டுக்களை
 அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திவருவது, காலத்தின் கட்டாயமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.எந்த முன்னனுபவமோ, பயிற்சிகளோ, ஆங்கில அறிவோ இல்லாத ஆா்வமுள்ள எந்தஒரு மாணவ மாணவியும் இந்த கருத்தரங்கில் பங்குபற்றி கற்றுக்கொள்ள முடியும்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மாணவா்களின் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆங்கிலப் புலமையினை அதிகரிக்க இந்த இலவச சந்தா்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இடம் AZIIE பொன்னையா லேன், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
Scrabble Meetup Jaffna,
ஊடக அனுசரணை newlanka.lk
இது போன்ற வாய்ப்புக்கள் உங்கள் நண்பா்கள், நண்பர்களின் பிள்ளைகளுக்கு உபயோகமானதாக இருக்க கூடும் என்பதால் இந்த தகவலை இப்போதே Share செய்யுங்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




புதுக்குடியிருப்பில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற 
இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் பெயரில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த சோதனை
 நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்களை அழைத்து சென்று சுண்டிக்குளம் கடற்கரை 
பகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் அவர்கள் மூவரையும் கைது 
செய்துள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள் இரண்டினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.மேலதிக 
விசாரணைகளை
 மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த கஞ்சாவின் பெறுமதி 8 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை எனவும் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 26, 39, 41 வயதுடைய குடும்பஸ்தர்கள் என்றும் குற்றவாளிகளை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
 தெரிவித்துள்ளார்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தென்மராட்சியில் வீட்டிற்குள் புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல்

யாழ்.தென்மராட்சியில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.தென்மராட்சி, மாசேரிப் பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக 
தெரிவிக்கப்படுகிறது.மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 
பஸ் மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி 
வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.தனியார் போக்குவரவு பேருந்து ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே தாக்குதல் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடியமையினால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் ஒன்றுகூடியமையினால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 24 பிப்ரவரி, 2020

கேரளக் கஞ்சாவை யாழ் வாசி மரக்கறி மூட்டைகளுக்குள் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக 
சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று இரவு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து,
 அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.