புதன், 26 பிப்ரவரி, 2020

புதுக்குடியிருப்பில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற 
இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் பெயரில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த சோதனை
 நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்களை அழைத்து சென்று சுண்டிக்குளம் கடற்கரை 
பகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் அவர்கள் மூவரையும் கைது 
செய்துள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள் இரண்டினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.மேலதிக 
விசாரணைகளை
 மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த கஞ்சாவின் பெறுமதி 8 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை எனவும் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 26, 39, 41 வயதுடைய குடும்பஸ்தர்கள் என்றும் குற்றவாளிகளை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
 தெரிவித்துள்ளார்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக