ஞாயிறு, 13 டிசம்பர், 2020

நல்லூரில் ஐஸ்கிறீம் கடையில் சமையல் அறையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றின் சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடணடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

வியாழன், 15 அக்டோபர், 2020

ஊவா மாகாணத்தில் இலஞ்சம் பெற்ற நகர அபிவிருத்தி பணிப்பாளர் கைது

  14,000 ரூபாயை இலஞ்சமாக பெற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊவா மாகாண அலுவலக பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

புதன், 14 அக்டோபர், 2020

நாட்டில் இராணுவத் தளபதி போக்குவரத்து தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

அபாய நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக...

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கொள்ளையடிக்கும் கும்பலில் இருவர் கைது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் பயங்கரமான சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கும்...

புதன், 22 ஜூலை, 2020

யாழ் நல்லைக்கந்தன் திருவிழாவிற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.அத்துடன் அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல், மற்றும் வியாபார  நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். மாநகர சபையில் 21-07-20.செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே  மேற்படி...

அம்மை நோய் தீர்க்கும்..பதநீர், ஆண்மைக்கோளாறை நீக்குமாம்

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?', `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?'... பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்... இலை  முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது.  பனைமரத்தை பத்திரகாளியின் அம்சமாகக் கருதி வணங்கி வருகிறார்கள். சிலர் வேரியம்மன் என்ற பெண் தெய்வமாகவும்  வணங்கி  வருகிறார்கள்....

சனி, 18 ஜூலை, 2020

யாழ் பல்கலை விஞ்ஞானபீட மாணவர்கள் சிலரிடையே கத்திக்குத்து

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று 17-07-20 .  11 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.. யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். அதனை அவதானித்த...

வெள்ளி, 10 ஜூலை, 2020

கொரோனா பரிசோதனைக் கூடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய  ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய  வளாகத்தில். 09-07-20வியாழக்கிழமை .அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு,  கட்டுநாயக்க  விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு  அறிக்கையினை...

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது எனவும்  தெரிவித்துள்ளார். ஆகவே...

செவ்வாய், 24 மார்ச், 2020

ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை வரை 5 மாவட்டங்களுக்களுக்கு

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு (24).இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல் செய்யப்பட்டிருந்தது. இது எதிர்வரும் (27) வெள்ளிக்கிழமை  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அதேதினத்தில் பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏனைய...

ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரஸ்சால் ஊரடங்கு உத்தரவு வடக்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிற்கு விதிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவு செவ்வாய்கிழமை (24.03.20) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 2மணிக்கு மீளவும் ஊரடங்கு அமுலாகும். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

புதன், 26 பிப்ரவரி, 2020

ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங் குயாழில்

யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல் 4.00 மணிவரை தெல்லிப்பளையிலுள்ள AZIIE ஆங்கில  கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.ஆா்வமுள்ள மற்றும் Scrabble கற்றுக்கொள்ள விரும்பும்...

புதுக்குடியிருப்பில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் பெயரில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த சோதனை  நடவடிக்கையினை...

தென்மராட்சியில் வீட்டிற்குள் புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல்

யாழ்.தென்மராட்சியில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.தென்மராட்சி, மாசேரிப் பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக  தெரிவிக்கப்படுகிறது.மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த  பஸ் மீது தீ...

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கேரளக் கஞ்சாவை யாழ் வாசி மரக்கறி மூட்டைகளுக்குள் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக  சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று இரவு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து,  அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து...

சனி, 4 ஜனவரி, 2020

பொற்பதி பகுதியில் மணல் கொள்ளையர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களை பிரதேச மக்கள் விரட்டியடித்துள்ளனர். இந் நிலையில், மக்கள் முறைப்பாடு வழங்கி 5 மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுவடமராட்சி கிழக்கு  பொற்பதி குடத்தனை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் ஒன்றினை பிரதேசவாசிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக...

வெள்ளி, 3 ஜனவரி, 2020

புதிய பொலிஸ் மா அதிபராக யாழ். மாவட்டத்திற்கு கபில கடுவத்த கடமையேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.மூத்த பொலிஸ்  அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட...