வெள்ளி, 21 மே, 2021

யாழ் குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கிச் சூடு

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள் ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்
 இடம்பெற்றது.
சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை 
எடுத்துள்ளனர்.
அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு அதனைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் 
மீட்கப்பட்டுள்ளது.
மணலை ஏற்றியவாறு வந்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். எனினும் கட்டளையை மீறி பயணித்த ஹன்டரின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச்
 சூடு நடத்தினர்.
அதனால் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையி
ழந்த ஹன்டர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனையடுத்து அதில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஒருவர் மட்டும் முள் கம்பிக்குள் சிக்குண்டு சிக்கியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பல கிராம சேவகர் பிரிவுகள் யாழ் உள்ளிட்ட மாவட்டங்களின் முடக்கம்

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களில் 9 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு மற்றும் மொனராகலை மாட்டத்தில் கெகிராவ, செவனகலை, பஹிராவ, ஹபரத்னவெல, ஹபுருகல, மஹாகம, இடிகொலபெல்லச ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர 
சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


ஞாயிறு, 13 டிசம்பர், 2020

நல்லூரில் ஐஸ்கிறீம் கடையில் சமையல் அறையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றின் சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக
 உடணடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக
 விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை 
குறுப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 15 அக்டோபர், 2020

ஊவா மாகாணத்தில் இலஞ்சம் பெற்ற நகர அபிவிருத்தி பணிப்பாளர் கைது

 14,000 ரூபாயை இலஞ்சமாக பெற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊவா மாகாண அலுவலக பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது 
செய்யப்பட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

புதன், 14 அக்டோபர், 2020

நாட்டில் இராணுவத் தளபதி போக்குவரத்து தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளும் ஏனைய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் 
அறிவுறுத்தியுள்ளார்.
வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின் அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் 
தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



அபாய நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் 
தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட 
வேண்டும் யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இல் இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது.
 பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண
 மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோனா தடுப்பிற்கு ஒத்துழைப்பு
 வழங்க வேண்டும்.
அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விபரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கொள்ளையடிக்கும் கும்பலில் இருவர் கைது


யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து 
வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் பயங்கரமான சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பொலிஸார் 
தெரிவிக்கும் போது;
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.அத்துடன் இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு 
சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இந்த 
நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது
 செய்யப்பட்டனர்.இவ்வாறு கைதானவர்கள் கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே ஆவார்கள்.கைதானவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.கும்பலைச் சேர்ந்த 
மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால், வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு 
வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>