புதன், 22 ஜூலை, 2020

யாழ் நல்லைக்கந்தன் திருவிழாவிற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு 
செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.அத்துடன் அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல், மற்றும் வியாபார
 நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். மாநகர சபையில் 21-07-20.செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே
 மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான
 பக்தர்களை 
அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும், சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதர்களுக்கு 
உத்தியோகபூர்வமாக
 எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.இதனால், ஏற்கனவே
 தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடைசெய்யப்படுகிறது’ என்றும் யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் மேலும் 
குறிப்பிட்டார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


அம்மை நோய் தீர்க்கும்..பதநீர், ஆண்மைக்கோளாறை நீக்குமாம்

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?', `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?'... பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்... இலை
 முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. 
பனைமரத்தை பத்திரகாளியின் அம்சமாகக் கருதி வணங்கி வருகிறார்கள். சிலர் வேரியம்மன் என்ற பெண் தெய்வமாகவும்
 வணங்கி
 வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல திருக்கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாகவும் உள்ளது. நுங்கு, 
பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



சனி, 18 ஜூலை, 2020

யாழ் பல்கலை விஞ்ஞானபீட மாணவர்கள் சிலரிடையே கத்திக்குத்து

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று 17-07-20 . 
11 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது..
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.
அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு
 வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


வெள்ளி, 10 ஜூலை, 2020

கொரோனா பரிசோதனைக் கூடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய 
ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய 
வளாகத்தில். 09-07-20வியாழக்கிழமை .அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, 
கட்டுநாயக்க
 விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு 
அறிக்கையினை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வகத்தில் ஒரேநாளில் 500 பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>